செய்திகள்,திரையுலகம் ஒரே மேடையில் அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்!…

ஒரே மேடையில் அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்!…

ஒரே மேடையில் அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்!… post thumbnail image
மும்பை:-சல்மான் கானின் சகோதரி ஆர்பிதா திருமண நிகழ்ச்சியில், சல்மான் கானுடன், ஷாரூக்கான் பேசிக்கொண்ட காட்சிகளை அனைவரும் பார்த்திருந்த நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பேமஸ் டாக் ஷோ நிகழ்ச்சி, 21 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, டிசம்பர் 2ம் தேதி பிரகதி மைதானத்தில் டாக் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமீர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் கலந்துகொள்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகள் பலரும், பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா , சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இந்தியா டிவி மற்றும் ஸ்டார் பிளஸ் சேனலில், இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 7ம தேதி, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி