குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா?… அதிர்ச்சியில் திரையுலகம்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் குஷ்புவிற்கு அரசியலில் தீராத தாகம் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தின் பிரபல கட்சி ஒன்றில் இணைந்தார். இதில் சில வருடங்கள் நீடித்தாலும் அங்கு இவருக்கு சரியான மரியாதை கிடைக்காததால் சில நாட்களுக்கு முன் தேசிய கட்சி ஒன்றில் இணைந்தார். கட்சியில் சேர்ந்தோமா, கணக்கு வழக்கை பார்த்தோமா என்றில்லாமல் விடுதலைப்புலிகளை பற்றி தவறாக பேசினார். இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களையும் மிகவும் கோபத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர் யாரிடமும் கேட்காமல் இஷ்டத்திற்கு இளம் நடிகர்கள் கால்ஷிட் வாங்குவதும், அப்படத்தை சுந்தர்.சியை வைத்தே இயக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த சுந்தர்.சிக்கு இவரது நடவடிக்கை சில நாட்களாக பிடிக்கவில்லையாம். மேலும் சமீபத்தில் இந்த விடுதலைப்புலிகள் பற்றி குஷ்பு பேசிய விதம் இவரை மிகவும் கோபப்படுத்தியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனால் எந்த நேரத்திலும் குஷ்புவை விட்டு சுந்தர்.சி பிரியலாம், அவர்களுக்குள் விவாகரத்து நடக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: