செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்!…

‘விஜய் 58’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்!…

‘விஜய் 58’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் ’கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது ஒரு ஃபேண்டஸி வகையான படமாம். இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம்.

சில தினங்களுக்கு முன்புதான் இதன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னை அருகே பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடந்தி வருகிறார்கள். படத்தில் மொத்தம் 6 சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இதற்காக நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரியவுள்ளனர். சீனாவில் இருந்து சாங் லின், தாய்லாந்தில் இருந்து பிரடிட், சென்னையை சேர்ந்த திலீப் சுப்பராயன் மற்றும் மும்பையை சேர்ந்த சுனில் ரோட்ரிகஸ் ஆகிய ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியாற்றுகின்றனர். நான்கு பேர்களில் 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி