செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…

பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…

பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது, பீப்பாய்க்கு 85 டாலராக குறைந்துள்ளது. இதனால், பெட்ரோல் விலையும், டீசல் விலையும் லிட்டருக்கு தலா 2½ வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது. இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு அமலுக்கு வரக்கூடும்.

பெட்ரோல் விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டால், அது கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 6-வது விலை குறைப்பு ஆகும். டீசல் விலையை பொறுத்தவரை, கடந்த மாதம் எண்ணெய் நிறுவனங்களிடம் விலை நிர்ணய அதிகாரம் அளிக்கப்பட்ட பிறகு, முதலாவது விலை குறைப்பு ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி