செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…

உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…

உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!… post thumbnail image
லண்டன்:-உலக மக்கள் தொகையில் இண்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டி உள்ள என ஐ நா தெரிவித்து உள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது.

அதன் மூலம் உலகில் அதிக நாடுகள் இணைக்கப்டுகிறது.உலகில் இணைய சேவையை (இண்டர்நெட்) பயன்படுத்துவோர் எண்ணிக்கை 300 கோடியை தாண்டி உள்ளது. இண்டர் நெட்டைபயன்படுத்துபவர்களின் தரவரிசைபட்டியலில் ,டென் மார்க் முதல் இடத்தையும் ,தென் கொரியா இரண்டாவது இடததையும் வகிக்கிறது. தொடர்ந்து ஐரோப்பியா உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பிஜி,கேப் வேர்ட்,தாய்லாந்து,ஆகியவை தரவரிசையில் கடந்த ஆண்டை விட மேம்பாடு அடைந்து உள்ளன இதற்கு சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் பாராட்டு தெரிவித்து உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியலில் சீனா 86 வது இடத்திலும் இந்தியா 129 இடத்திலும் பாகிஸ்தான் 142 வது இடத்திலும் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி