காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரபல நடிகை குஷ்பூ!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூ தான். அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார். இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், பின்னர் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இதுதவிர டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த 2010ம் ஆண்டு திமுக கட்சியில் இணைவதாக அறிவித்தார் நடிகை குஷ்பூ. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், 2014ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் திமுக.வுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதனைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விட்டு விலகிய குஷ்பூ, ஜூன் 16ம் தேதி, திமுக., கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

மேலும் நான் எந்தகட்சியிலும் சேரப்போவதில்லை என்று அப்போது கூறினார். இந்நிலையில் திமுக.வை விட்டு விலகிய குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணை தலைவர் ராகுலையும் இன்று மாலை 5மணியளவில் டில்லியில் சந்தித்து பேச இருக்கிறார் குஷ்பூ. அதன்பின்னர் முறைப்படி தான், காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அறிவிக்க இருக்கிறார் குஷ்பூ.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: