செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு அதிக கோல்கள் அடித்து மெஸ்சி புதிய சாதனை!…

அதிக கோல்கள் அடித்து மெஸ்சி புதிய சாதனை!…

அதிக கோல்கள் அடித்து மெஸ்சி புதிய சாதனை!… post thumbnail image
ஸ்பெயின்:-லா லிகா என்று அழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பார்சிலோ அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியை தோற்கடித்தது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.

இதன் மூலம் லா லிகா போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் (253 கோல்கள்) என்ற புதிய சாதனையை மெஸ்சி படைத்தார். தனது 289-வது போட்டியில் மெஸ்சி இந்த சாதனையை படைத்தார். ஸ்பெயினின் டெல்மோ சாரா 251 கோல்கள் (278 ஆட்டங்களில்) அடித்து படைத்து இருந்த 59 ஆண்டு கால சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி