செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட மிக பெரிய பிரபலம்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட மிக பெரிய பிரபலம்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட மிக பெரிய பிரபலம்!… post thumbnail image
சென்னை:-கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று நடந்தது . அதாவது விருது வழங்கும் முன்னர் புதிதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர் பேசினார்.

அவர் தனது பேச்சில் கோவா ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டவர், விழாவின் நாயகனான ரஜினி பெயரை மறந்துவிட்டார் சிறிது நேரம் அங்கு இருந்து சில பேர் ரஜினி பெயரை கோஷம் எழுப்ப அதன் பின்னர் இதை உணர்ந்த அவர், ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிக்க வேண்டும். நான் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதை எடுத்து வர மறந்துவிட்டேன் என்று சொல்லி சமாளித்தார் . இதை தனது ஸ்டைலிலே சிறு புன்னகையோடு கவனித்து கொண்டு இருந்தார் சூப்பர் ஸ்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி