செய்திகள்,திரையுலகம் இளம் தலைமுறைகளுடன் போட்டி போட முடியாத ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

இளம் தலைமுறைகளுடன் போட்டி போட முடியாத ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

இளம் தலைமுறைகளுடன் போட்டி போட முடியாத ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி என்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 தான். ஆனால், தற்போதுள்ள இணைய உலகத்தில் அவரது ரசிகர்களால் போட்டி போட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். ஏனெனில் விஜய்அஜித் ரசிகர்களின் பலம் நெட்டில் கொடி கட்டி பறக்க ரஜினி ரசிகர்களால், அவர்கள் இடத்தை பிடிப்பது என்பது கடினம் தான்.

கத்தி டீசர் வெளியான ஒரு நாளில் 10 லட்சம் ஹிட்ஸை தாண்டியது. அதேபோல் தான் அஜித்தின் ஆரம்பம், பில்லா-2 போன்ற படங்கள். ஏன் தனுஷ் படம் கூட எளிதில் 10 லட்சம் ஹிட்ஸை தாண்டுகிறது.இந்நிலையில் லிங்கா படத்தின் ட்ரைலர் வெளியாக ஒரு நாளில் 9 லட்சம் ஹிட்ஸை கூட தொட முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் பலத்தை குறைத்து எடை போடவும் முடியாது.

இன்றும் இந்தியாவில் அதிக வசூல் படங்களில் எந்திரன் முதல் 5 இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த தமிழ் படமும் இந்த ரெக்கார்டை முறியடிக்கவில்லை. இந்த சாதனையை மீண்டும் லிங்கா மூலமாகவே முறியடிக்க காத்திருக்கிறது திரையுலக சிங்கம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி