செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!… post thumbnail image
ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோய் தாக்கி இதுவரை 5,420 பேர் பலியாகி உள்ளனர். 15,145 பேர் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று இந்த நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது. முன்னதாக ஐ.நா. சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ‘எபோலா’வுக்கு 5,177 பேர் பலியானதாகவும், 14,413 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.அதை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எபோலா’ நோய் தாக்குதலில் பலி எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. கினியா, லைபீரியா, சியர்ராலோன் நாடுகளில் சாவு எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. கடந்த 16ம் தேதி வரை லைபீரியாவில் நோய் தாக்கிய 7,069 பேரில் 2,964 பேர் உயிரிழந்துள்ளனர். சியர்ரா லோனில் 6,073 பேரில் 1,250 பேரும், பலியாகி உள்ளனர். கினியாவில் 1,192 பேர் இறந்துள்ளனர். 1,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நைஜீரியா மற்றும் சினேகல் போன்ற நாடுகளில் ‘எபோலா’ நோய் முற்றிலும் குணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் நர்சு ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரும் குணமாகி விட்டார். அமெரிக்காவில் 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் பலியாகி விட்டார். 584 சுகாதார ஊழியர்கள் ‘எபோலா’ நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 329 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி