செய்திகள்,திரையுலகம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!… post thumbnail image
சென்னை:-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது, ‘பென்சில்’, ‘டார்லிங்க’ ஆகிய இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதே சமயம், ‘காக்கா முட்டை’, ‘ராஜதந்திரம்’, ‘ஈட்டி’ என சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படங்களையடுத்து விஜய் நடிக்க ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்க உள்ள புதிய படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

அந்தப் படம் ஜிவியின் இசையமைப்பில் உருவாக உள்ள 50வது படமாக அமையப் போகிறது. ஜி.வி.பிரகாஷ் 2006ம் ஆண்டு வெளிவந்த வெயில் டம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இசைமைத்திருக்கிறார். ஜி.வி.யின் 50வது படமாக விஜய் நடிக்க இருக்கும் படமாக அமைந்திருப்பது அவரை மிகவும் மகிழ்ச்சிக்கள்ளாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே, விஜய் நடித்த தலைவா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததால் மீண்டும் ஒரு மியூசிக்கல் ஹிட்டைக் கொடுக்க வேண்டும் என ஜி.வி.நினைத்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி