செய்திகள்,திரையுலகம் அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரைப்படம்!…

அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரைப்படம்!…

அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-இந்திய திரையுலகம் மட்டுமல்லாது உலகத்திலுள்ள இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ‘லிங்கா’ படம் அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாக உள்ள இப்படம் அமெரிக்காவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். ரஜினிகாந்த் இதற்குமுன் நடித்து வெளிவந்த எந்திரன் படம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பலநாடுகளில் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக்குவித்தது.

எந்திரன் திரைப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் படங்களுக்கான உலக அளவிலான மார்க்கெட் மேலும் பரவலாகி இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் தமிழ்ப்படங்கள் அதிகஅளவில் திரையிடப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் லிங்கா படம் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளதாம். அமெரிக்கத் திரையுலக வரலாற்றில் லிங்கா படம் புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளதாக படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி