26 வயது பெண்ணை மணக்கும் 80 வயது கொலையாளி!…

விளம்பரங்கள்

லாஸ்ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன் (80). இவர் கடந்த 1969ம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். குறிப்பாக டைரக்டர் ரோமன் போலன்ஸ்கியின் 8½ மாத கர்ப்பிணி மனைவி ஷரோன் டேட் என்பவரை படுகொலை செய்தார். இக் கொடூர கொலைகளுக்காக கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். அங்கு அவரை சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இளம் பெண் அடிக்கடி பார்க்க வந்தாள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேன்சன் சிறை கைதி என்பதால் கல்போர்னியா மறுவாழ்வு சீர் திருத்த துறையில் அனுமதி பெற வேண்டும்.அவர் தன்னை விட 54 வயது குறைந்த பர்டனை திருமணம் செய்ய அனுமதி கேட்டு கடந்த 7ம் தேதி விண்ணப்பம் செய்தார். அதை ஏற்று திருமணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கின்றனர். மேன்சன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த திருமணம் குறித்து 26 வயது பெண் பார்டன் கூறும் போது, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனவே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். நான் அவருடன் முழுமையாக வாழ்வேன். அவரும் என்னுடன் வாழ் நாள் முழுவதும் இருப்பார் என்றார். தன்னை ஒரு ஸ்டார் என்று புகழ்ந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: