செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…

உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…

உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பினும், உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள் தொகை ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சுமார் 35.6 கோடி இளைஞர்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம்) அடுத்தபடியாக, உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் (மொத்த மக்கள் தொகை 136 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம்) இதே வயதையொத்த சுமார் 26.9 கோடி இளைஞர்கள் உள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதே பட்டியலில், சீனாவுக்கு அடுத்தபடியாக 6.7 கோடி இளைஞர்களை கொண்ட இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், 6.5 கோடி இளைஞர்களை கொண்ட அமெரிக்கா நான்காவது இடத்திலும், 5.9 கோடி இளைஞர்களை கொண்ட பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், 5.7 கோடி இளைஞர்களை கொண்ட நைஜீரியா ஆறாவது இடத்திலும், 5.1 கோடி இளைஞர்களை கொண்ட பிரேசில் ஏழாவவது இடத்திலும், 4.8 கோடி இளைஞர்களை கொண்ட வங்காளதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி