செய்திகள் இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்தவர்கள் கிறிஸ் பிக்கோ-ஆஷ்லி தம்பதியர். கர்ப்பிணியான ஆஷ்லி, 24 வாரங்களே ஆன நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அவசர அறுவை சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அதிக உதிரப்போக்கு காரணமாக ஆஷ்லி உயிரிழந்தார்.

குறை பிரசவமாக பிறந்ததால், அந்த பச்சிளம் குழந்தையும் உயிருக்கு போராடியது. பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இன்குபேட்டரில் வைத்து அக்குழந்தை பராமரிக்கப்பட்டது. மனைவியை இழந்தநிலையில், குழந்தையையும் இழக்க வேண்டி இருக்குமோ என்ற கவலையில், கிறிஸ் பிக்கோ, குழந்தை இருந்த வார்டில் கிடாருடன் நுழைந்து, குழந்தை அருகே அமர்ந்து பிரபல பீட்டல்ஸ் பாடகர்கள் பாடிய ஒரு பாடலை சோக கீதமாக பாடினார். அவரது பாடல், கல்லையும் கரைய வைக்கும் விதத்தில் உருக்கமாக அமைந்தது.

இதற்கிடையே, அந்த பச்சிளம் குழந்தை, மூன்று நாட்களில் இறந்து விட்டது. குழந்தைக்காக கிறிஸ் பிக்கோ பாடிய சோக கீதம், வீடியோ படமாக இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதை ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்த்துள்ளனர். அந்த அளவுக்கு சோக கீதம், பலரையும் உருக வைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி