விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் ‘சர்வீஸ் பேக்-2’ 2007 மார்ச்சில் வெளியானது. தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக ‘2012 ஆர்2’ சர்வர் இருக்கிறது.

பெரும்பாலான கணிணி பயன்பாட்டாளர்கள் விண்டோஸ் 7, 8.1 என அப்டேட் ஆகிவிட்டார்கள். எனினும், இன்னும் சில பயன்பாட்டாளர்கள் 2003 சர்வரை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் ஜூலை 14, 2015 முதல் விண்டோஸ் 2003 சர்வர் பதிப்பு சேவையை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

எனவே, அதற்கு மேல் செக்யூரிட்டி பேட்ச்-கள் மற்றும் அப்டேட்கள் வழங்கப்பட மாட்டாது என்பதால் எளிதாக வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, விரைவில் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளுக்கு அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயம் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: