20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு இந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார்.

ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீதேவி சென்னை வந்தார். கிழக்கு கடற்கரை சாலை ஆதித்ராம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சென்றார். அங்கு ஸ்ரீதேவியின் நடன காட்சியொன்றை சிம்புதேவன் படமாக்கினார்.

இதில் ஸ்ரீதேவியுடன் விஜய், ஹன்சிகா, சுதீப் போன்றோரும் இணைந்து ஆடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் இதில் ஆடினர். இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீதேவி சென்னையில் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கிறார். இதில் ஹன்சிகா தவிர சுருதிஹாசனும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: