செய்திகள்,திரையுலகம் தூம் 4 படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் அறிமுகம்?…

தூம் 4 படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் அறிமுகம்?…

தூம் 4 படத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் அறிமுகம்?… post thumbnail image
மும்பை:-‘பாலிவுட் பாட்ஷா’ என அனைவராலும் அழைக்கப்படும் ஷாருக்கான், இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் வெற்றி அவரை மகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், அவரது மகன் குறித்த புதிய செய்தி ஒன்று உலா வரத்துவங்கியுள்ளது.

ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் தூம்-4 படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்பது தான் அந்த செய்தி.தனது பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த கவனமாக இருக்கும் ஷாருக், மகன் ஆர்யனுக்கு 21 வயதான பின்பு தான் நடிக்க வைக்கவேண்டுமென தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஆர்யன் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி