செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதையை உளறிய சுதீப்!…

நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதையை உளறிய சுதீப்!…

நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதையை உளறிய சுதீப்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார்கள். அதோடு இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி, கன்னட நடிகர் சுதீப் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரில் ஒரு விழாவில் பேசிய சுதீப், இப்படத்தில் நானும், ஸ்ரீதேவி அவர்களும் நடிப்பது உண்மை தான். விஜய்யுடன் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் நான் எதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எதிரி என்றால் வில்லன் வேடமில்லை, என் கதாபாத்திரம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும் என்பது மாதிரி இருக்கும். அரசவை ராணியாக ஸ்ரீதேவி நடிக்கிறார், படைத்தளபதியாக நான் நடிக்கிறேன் என்று பாதி கதையை கூறியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி