செய்திகள்,திரையுலகம் கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…

கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…

கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கஸ்மோரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன், படப்பிடிப்புக்காக தேதிகளை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நடித்து வருகிறார். ‘மாஸ்’ படத்திலும் நடித்து வருகிறார். கார்த்தி தற்போது ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு இருவரும் ‘கஸ்மோரா’வில் இணைவார்கள் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி