செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!… post thumbnail image
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இதனால் கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்துக்கு சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இதையடுத்து இந்தோனேசியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடல் அலைகள் சீறிப்பாய்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்பகுதியை தாக்கும். 300 கி.மீ. தூரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஒரு பகுதியை சுனாமி அலைகள் தாக்கும். பிலிப்பைன்ஸ் கடற்பகுதியை முழுமையாக தாக்கும். மேலும் ஜப்பான், தைவான் கடற்பகுதிகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்தோனேசியாவின் ஒரு பகுதியிலும் பிலிப்பைன்சில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.மலுகு தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பாதிப்பு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. 7.3 அளவு நிலநடுக்கம் என்பது சக்தி வாய்ந்தது ஆகும். அது 300 கி.மீ. தூரத்துக்குதான் பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா– இலங்கை கடற்பகுதி பல ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதால் இங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இதுபோல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் தமிழக கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியான சோக சம்பவம் ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி