சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-திரையுலகில் ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளுக்கும் திறமைகளுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் கூறுவதில் ஆர்வம் உடையவர் நடிகர் விஜய். தற்போது இவர் சிபிராஜை பாராட்டியுள்ளார். சிபிராஜ் தற்போது ‘நாய்கள் ஜாக்கிரத்தை’ படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்துள்ளார். மேலும் மனோபாலா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசையமைக்கும் இப்படத்தை நிசார் ஒளிப்பதிவை செய்துள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மர்மமான முறையில் நடக்கும் ஒரு கொலையை துப்பறிவாளரான சிபி, தன் நாயைக் கொண்டு எப்படி அதனை கண்டுபிடிக்கிறார் என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தில் நாய்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டாக்கி டாக்கி என்னும் வீடியோ பாடலை வெளியிட்டனர். இதை பார்த்த விஜய், பாடல் சிறப்பாக இருந்தது என்றும் நான் விரும்பி பார்த்தேன் என்றும் சிபிராஜிடம் கூறியுள்ளார். விஜய் இவ்வாறு கூறியது எனக்கு பெருமையாக உள்ளது என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: