செய்திகள்,விளையாட்டு 2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…

2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…

2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!… post thumbnail image
லண்டன்:-ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு சர் கேரிபீல்டு சோபர்ஸ் கோப்பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு 26 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 17 வரை நடத்தப்பட்ட வாக்கெடுப்பு காலத்தில் ஜான்சன் 29 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவரது சராசரி 15.23 ஆகும்.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து ஏழு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். 16 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 21 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை சக நாட்டவரான ரிக் பாண்டிங்கிற்கு பின் ஜான்சன் தற்போது இரண்டாவது முறையாக பெறுகிறார். முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டும் ஜான்சன் இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி