செய்திகள்,திரையுலகம் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிகை அனுஷ்கா கிளாமர்!…

‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிகை அனுஷ்கா கிளாமர்!…

‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிகை அனுஷ்கா கிளாமர்!… post thumbnail image
சென்னை:-நடிகை அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட தெலுங்கு படம் ருத்ரமாதேவி. இதில் அனுஷ்கா ஆந்திராவில் குறுநில ராணியாக இருந்த ராணி ருத்ரமாதேவி கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா மாதிரி ஆந்திராவில் ராணிருத்ரமாதேவி. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் இதுதான் என்கிறார்கள்.

இதில் அனுஷ்கா 8 கிலோ நகைகள் அணிந்து அழகான இளவரசியாகவும், போர் வீராங்கணையாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஒரு ஆண்டுக்கு முன்பு வெளிவந்தது. அதில் அனுஷ்கா வாள்வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது இதன் அடுத்த லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அழகான இளவரசியாக காட்சி தருகிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் குணசேகர் கூறியதாவது: இளவரசி கேரக்டருக்காக அனுஷ்கா எடை குறைத்தார். அந்த கேரக்டரில் கொஞ்சம் கிளாமரும் இருக்கிறது. அசல் தங்க நகைகள் அணிந்து நடித்திருக்கிறார். அவரது இளவரசி கேரக்டர் படப்பிடிப்புகள் கடைசியாக நடத்தப்பட்டது. என்கிறார் இயக்குனர் குணசேகர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி