செய்திகள் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரர் ஹெரால்ட் ஹாமின் (68). இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவரது மனைவி சூ ஆன் (58). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனது மனைவி சூ ஆன்னிடம் விவாகரத்து கேட்டு ஒக்லஹாமா சிறப்பு கோர்ட்டில் ஹெரால்ட் ஹாமின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சுமார் 9 வாரங்கள் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், மனைவி சூ ஆன்னியை விவாகரத்து செய்ய ஹெரால்ட் ஹாமின் ரூ. 6 ஆயிரம் கோடி (1பில்லியன் டாலர்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கின் தீர்ப்பு 80 பக்கம் இருந்தது. இந்த பணம் கிடைக்க பெறும் நிலையில் அமெரிக்காவின் 100 பணக்கார பெண்களில் ஒருவராக சூ ஆன் திகழ்வார்.சூ ஆன் கோடீசுவரர் ஹெரல்ட் ஹாமின் 2–வது மனைவி ஆவார். 1987–ம் ஆண்டு முதல் மனைவி ஜுடித்தை விவாகரத்து செய்த அவர் 1988–ம் ஆண்டு சூ ஆன்னை திருமணம் செய்து கொண்டார். தனது எண்ணை நிறுவனத்தில் முக்கிய பொறுப்பும் வழங்கினார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்டீல் வெயின் கடந்த 2010–ம் ஆண்டில் தனது மனைவியை விவாகரத்து செய்ய ரூ.450 கோடி வழங்கினார். அதுவே, விவாகரத்து வழக்கில் மனைவிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நஷ்டஈடு தொகையாக இருந்தது. தற்போது இந்த தீர்ப்பின் மூலம் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு வழங்கப்படும் நஷ்டஈடு தொகை சாதனை படைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி