செய்திகள்,திரையுலகம் பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…

பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…

பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கவுள்ளார். இந்த பிரம்மாண்டமான செட்டில் சண்டைக்காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் சிம்புதேவன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதிப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி