செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!… post thumbnail image
புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்று கூறியது.

இதனால், இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக, நேற்று இந்தியன் வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் சார்பில் வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஊழியர்கள் தரப்பில், சம்பள உயர்வு கோரிக்கையை 23 சதவீதத்துக்கு குறைத்து கொண்டனர். ஆனால், இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத சம்பள உயர்வுதான் அளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.எனவே, திட்டமிட்டபடி இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதற்கான நோட்டீசு, இந்தியன் வங்கிகள் சங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பேரவை, அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவையும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக பாரத ஸ்டேட் வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றின் 50 ஆயிரம் கிளைகள் உள்ளன. மொத்தம் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இன்று வங்கி பணிகள் முடங்கும். காசோலையை பணம் ஆக்குவது, பண பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது.அதே சமயத்தில், ஏ.டி.எம். சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, வேலை நிறுத்தத்தை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியன் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி