பட அதிபர்கள் வழக்கு: நடிகர் லாரன்சுக்கு முன் ஜாமீன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ‘ரெபல்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை ரூ.22.5 கோடி செலவில் எடுத்து முடிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கே.பகவான், புல்லாராவ் ஆகியோருடன் ஒப்பந்தம் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு செலவு நிர்ணயித்ததை விட கூடிவிட்டது.

இதையடுத்து ஒப்பந்தத்தை மீறி செலவு செய்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக பட அதிபர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார்கள். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் லாரன்ஸ் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: