செய்திகள்,திரையுலகம் ‘ஜப் தக் ஹாய் ஜான்’ சாதனையை முறியடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…

‘ஜப் தக் ஹாய் ஜான்’ சாதனையை முறியடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!…

‘ஜப் தக் ஹாய் ஜான்’ சாதனையை முறியடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம்!… post thumbnail image
மும்பை:-ஷாரூக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஹேப்பி நியூ இயர்’. இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தபோதும் வசூலுக்கு ஒன்றும் குறைவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிசில் சக்கபோடு போட்டு கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகளவிலும் இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. இதுவரை இப்படம் உலகளவில் 13.75 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

ஷாரூக்கானின் படங்களில், ஜப் தக் ஹாய் ஜான் தான் அதிகபட்சமாக 13.56 மில்லியன் டாலர் வசூல் செய்து இருந்தது. இப்போது அந்த சாதனையை ஹேப்பி நியூ இயர் படம் முறியடித்துள்ளது. உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஷாரூக்கானின், ஹேப்பி நியூ இயர் படம் 5வது இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி