செய்திகள்,திரையுலகம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!…

இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!…

இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்!… post thumbnail image
சென்னை:-தீபாவளிக்கு வெளியான ‘கத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.கத்தி படத்தின் வெற்றியைத் தொடந்து முருகதாஸ் அடுத்த பட வேலைகளை தொடங்கவுள்ளார்.

புதிதாக தொடங்கவுள்ள படத்தை இந்தியில் எடுக்கவுள்ளார். இதில் நாயகியாக சோனாஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இப்படத்தை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் அனிருத் இந்தியில் அறிமுகமாகிறார்.
மேலும் முருகதாஸ் தயாரிக்க உள்ள ஒரு படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி