செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை நீக்கம்!…

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை நீக்கம்!…

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை நீக்கம்!… post thumbnail image
ரியாத்:-சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.இந்த தடை சட்டத்துக்கு எதிராக கார் ஓட்டி அபராதம் கட்டினார்கள். இந்நிலையில் பெண்களின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது.

அதை தொடர்ந்து, அங்கு பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படுகிறது. ஆனால், சில நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார் ஓட்ட முடியும். அதுவும் அவர்கள் இரவு 8 மணி வரை மட்டுமே கார் ஓட்டலாம். கார் ஓட்டும் போது பெண்கள் ‘மேக்–அப்’ செய்து கொள்ள கூடாது.

மேலும், பெண்கள் கார் ஓட்ட அவர்களின் ஆண் உறவினர்கள் அனுமதி பெற வேண்டும், அதாவது கணவர் அல்லது தந்தை அனுமதி தர வேண்டும். அவர்கள் இல்லாத பட்சத்தில் சகோதரர் அல்லது மகனின் அனுமதி அவசியம் தேவை. இந்த நிபந்தனைகளுடன் பெண்கள் கார் ஓட்ட சவுதி அரேபியா மன்னரின் ஆலோசனை கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி