செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!… post thumbnail image
ஐதராபாத்:-ஐதராபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்தது. இதன்மூலம் அவர் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதுவரை 144 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி அதில் பேட் செய்ய களம் இறங்கிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கை 136. இதையடுத்து குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 141 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை கடந்ததே, இந்த இலக்கை கடந்ததில் அதிவேகமாக இருந்தது.

1989–ம் ஆண்டு அவர் நிகழ்த்திய இந்த சாதனையை 25 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி முறியடித்திருக்கிறார். முன்னதாக அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வகையில் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை 26 வயதான கோலி சமன் செய்திருந்தார். அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த டாப்–5வீரர்கள் விவரம் வருமாறு:–

வீரர் நாடு இன்னிங்ஸ்

விராட் கோலி இந்தியா 136
ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 141
கங்குலி இந்தியா 147
டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 147
ஹைடன் ஆஸ்திரேலியா 154

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி