ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது.அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரம் பின்வருமாறு;

டோனி(கேப்டன்), கோலி, தவான், விஜய், ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரெய்னா, சாகா, நமன் ஓஜா, அஸ்வின், கரண் சர்மா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோன் ஆகிய 19 பேர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: