அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…

விளம்பரங்கள்

ஐதராபாத்:-ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமை 28 வயதான தவானுக்கு கிடைத்தது.

இதற்கு முன்பு இந்தியாவின் சித்து 2 ஆயிரம் ரன்களை கடக்க 52 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டதே சிறப்பானதாக இருந்தது. மொத்தத்தில் துரிதமாக 2 ஆயிரம் ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா (40 இன்னிங்ஸ்), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (45), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (45), டிராட் (47) ஆகியோருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்சுடன் 5-வது இடத்தை தவான் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: