செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ்!…

மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ்!…

மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. தற்போது இவர் ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் தனுஷ் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வை ராஜா வை படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷிற்கு நன்றிகள். அவரை மறுபடியும் இயக்குவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என ட்வீட் செய்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி