செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!… post thumbnail image
புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த 31ம் தேதி நள்ளிரவு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

அந்த விலை குறைப்புக்கு பிறகு, கடந்த 7 நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து வருகிறது. கடந்த 31-ந்தேதி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 ஆயிரத்து 209 ரூபாய் 96 காசுகளாக இருந்தது. அது, தற்போது பீப்பாய்க்கு 4 ஆயிரத்து 939 ரூபாய் 44 காசுகளாக சரிந்துள்ளது. அதாவது, 5.19 சதவீதம் விலை சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்துள்ளதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15ம் தேதி வாக்கில் வெளியிடும் என்று கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி