செய்திகள் ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!… post thumbnail image
ஜெனிவா:-இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா?… இல்லையா?… என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி