அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!… post thumbnail image
புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்காக கடந்த 35 ஆண்டுகளாக சிறந்த வகையில் செயலாற்றியமைக்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அரிய கவுரவத்தை பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங்தான் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ‘தி க்ராண்ட் கார்ட்டன் ஆப் தி பாலோவ்னியா பிளவர்ஸ்’ என்ற இந்த உயர் விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் மன்னர் அக்கிட்டோ வழங்கி வாழ்த்தினார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், மன்னர் அக்கிட்டோ மற்றும் மகாராணி மிச்சிக்கோ ஆகியோர் தங்களது அரண்மனையில் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷன் ஆகியோருக்கு இன்று சிறப்பு விருந்து அளித்து கவுரவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி