செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!… post thumbnail image
துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி கனவு அணியில் இடம் பிடித்துள்ள டோனி, அதில் 5-வது முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் ஷர்மா ஆகிய இந்தியர்களுக்கும் ஒரு நாள் போட்டி அணியில் இடம் கிட்டியுள்ளது. அதே நேரத்தில் ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணியில் இந்தியர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வரிசையாக தோற்றதால் இந்திய வீரர்கள் ‘மதிப்பு’ இல்லாமல் போய் விட்டனர்.டெஸ்ட் அணியில் கேப்டன் அந்தஸ்தை இலங்கையின் மேத்யூஸ் தட்டிச் சென்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஸ்டெயின் தொடர்ந்து 7 ஆண்டாக இந்த அணியில் இடத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு நாள் போட்டி அணி: முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்), குயின்டான் டீ காக் (தென்ஆப்பிரிக்கா), விராட் கோலி (இந்தியா), ஜார்ஜ்பெய்லி (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), டோனி (இந்தியா, விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), ஜேம்ஸ் பவுல்க்னெர் (ஆஸ்திரேலியா),

ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), முகமது ஷமி (இந்தியா), அஜந்தா மென்டிஸ் (இலங்கை), ரோகித் ஷர்மா (இந்தியா, 12-வது வீரர்) கனவு டெஸ்ட் அணி: டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), சங்கக்கரா (இலங்கை), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), ஜோ ரூட் (இங்கிலாந்து), மேத்யூஸ் (இலங்கை, கேப்டன்), மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா),

ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), ஹெராத் (இலங்கை), டிம் சவுதி (நியூசிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து, 12-வது வீரர்). மேற்கண்ட பட்டியலை இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமையிலான 5 பேர் கொண்ட விருது கமிட்டியினர் தேர்வு செய்துள்ளனர்.

கும்பிளே கூறுகையில், 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி முதல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி வரை விருதுக்குரிய காலக்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 12 மாதங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்ட பல வீரர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வீரர்களை கனவு அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பது உண்மையிலேயே மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாகும்.என்றாலும் சாத்தியமானவரை சரியான கலவையில், எந்த அணியையும் எந்த சூழலிலும் தோற்கடிக்க கூடிய திறமை படைத்த சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக நினைக்கிறோம். எதிரணி எப்படிப்பட்டது, ஆடுகளம், ஆட்டத்தின் சூழல் ஆகியவற்றையும் வீரர்களின் தேர்வின் போது கவனத்தில் கொண்டோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி