செய்திகள் தனது வாழ்க்கையை கௌரவமாக முடித்துகொண்ட புற்றுநோய் பாதித்த பெண்!…

தனது வாழ்க்கையை கௌரவமாக முடித்துகொண்ட புற்றுநோய் பாதித்த பெண்!…

தனது வாழ்க்கையை கௌரவமாக முடித்துகொண்ட புற்றுநோய் பாதித்த பெண்!… post thumbnail image
வாஷிங்டன்:-கலிபோர்னியாவில் வசித்து வந்த பிரிட்டானி மேனார்ட் என்னும் 29 வயது பெண்ணிற்கு மூளை கட்டி பாதிப்பு இருந்தது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற பல மருத்துவ நிபுணர்களை சந்தித்த பிரிட்டானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.பிரிட்டானியின் மூளை கட்டி பாதிப்பு இறுதிக்கட்ட நிலையை அடைந்திருந்ததால் அவரால் இன்னும் 6 மாத காலம் மட்டும் உயிர் வாழ முடியுமென மருத்துவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், நோயால் துடிதுடித்து சாகாமல், கௌரவமாக உயிரிழக்க முடிவு செய்தார்.

அதன்படி கௌரவமாக இறக்கும் சட்டம்(Death with Dignity Act) நடைமுறையில் உள்ள ஒரே அமெரிக்க மாநிலமான ஒரேகானுக்கு தனது குடும்பத்தினரோடு வந்த பிரிட்டானி, நவம்பர் மாதம் 2 ஆம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து பிரிட்டானி தெரிவிக்கையில், இதை தற்கொலையோடு ஒப்பிடுவது சரியல்ல. என் உடலில் ஒரு சிறிய அணுவிற்கு கூட உயிரிழக்கும் எண்ணமில்லை. என்னை பாதித்துள்ள நோய் என்னை கொல்கிறது. நான் பல நிபுணர்களிடம் இது குறித்து ஆலோசித்தேன், நான் எனது நோயால் இறந்தால், அது கொடுமையான மரணமாக இருக்கும். அதற்கு பதிலாக கௌரவமாக இறப்பது என்ற முடிவை நான் எடுத்துள்ளேன் எனக் கூறி இருந்தார்.

பிரிட்டானி அவர் விருப்பப்படியே கடந்த இரண்டாம் தேதி மருத்துவர்கள் பரிந்துரைத்த பார்பிடுரேட்ஸ் என்னும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை தடுக்கும் மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். அவர் மரண படுக்கையில் இருந்தபோது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், எனக்கு மிகவும் பிடித்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் குட்பை. இன்று நான் கௌரவமாக உலகைவிட்டு செல்கிறேன். என்னை தாக்கிய கொடிய நோயால் நான் அதிக வேதனை அடைந்துவிட்டேன். இந்த உலகம் ஒரு அழகான இடம். நான் பயணங்களின்போது நிறைய கற்றுக்கொண்டேன். நான் இந்த செய்தியை டைப் செய்யும்போது எனது படுக்கையை சுற்றி எனக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் சிலர் இருக்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி