செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…

‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…

‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-விஜய்சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 கோடி வசூல் செய்துவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து படம் வெளிவந்து 5 நாட்களில் மட்டும் உலகளவில் இப்படம் 71.05 கோடி வசூலித்ததாகவும் கூறப்பட்டது. தற்போது 12 நாட்கள் ஆன நிலையில் உலகமெங்கிலும் 100.7 கோடி வசூலித்திருப்பதாக, படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 65.1 கோடி ரூபாயும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 20.2 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி