செய்திகள்,திரையுலகம் ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!…

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘கத்தி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெளியானது ‘கத்தி’ திரைப்படம். இந்த படத்தில் கார்ப்பரேட் வர்த்தகத்தை எதிர்த்தும், மீடியாக்களின் செயல்பாடுகள் குறித்தும், 2 ஜி வழக்கு குறித்தும், விஜய் பேசிய வசனங்கள் சர்ச்சை ஏற்படுத்திய போதிலும், படம் திரையரங்குகளில் நன்றாகவே ஓடுகிறது.

இந்த படம் வெளியான முதல் நாளே 23.8கோடி வசூலானது. இப்படம் கடந்த ஒரு வாரத்தில் , இந்தியாவில் மட்டும் 47.7 கோடியையும், வெளிநாடுகளில் 23.35 கோடியையும் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இந்த வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கேரளாவில் எதிர்பாத்த அளவிற்கு வசூல் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி