செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சுயசரிதையில் கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன் என்று தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சுயசரிதையில் கூறி இருப்பதாவது:– கேப்டன் பதவிக்கு எனக்கு எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. அணி தோல்வி அடையும்போது கேப்டன் பதவியை நான் வெறுத்தேன். இதற்கு நானே தான் பொறுப்பு என்று உணர்ந்தேன்.

கேப்டன் பதவியில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதனால் இந்த விளையாட்டில் இருந்தே விலகிவிடலாம் என்று விரும்பினேன். மிகவும் நெருக்கமாக வந்து தோற்றதால் கடும் வேதனை அடைந்து எனது மனைவிடம் இதை தெரிவித்தேன். கேப்டன் பதவியால் ஏற்பட்ட விரக்தியால் விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தேன். 1997–ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான பார்படாஸ் டெஸ்டில் 120 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றோம். 1997–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதி (திங்கட்கிழமை) இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு தினமாகும். இந்த தோல்வி எனது கேப்டன் பதவியில் நடந்த மிகவும் மோசமான நிகழ்வாகும். வெற்றி பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். 81 ரன்னில் சுருண்டு பரிதாபம் அடைந்தோம். இதனால் 38 ரன்னில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. மோசமான பேட்டிங்கால் தோற்றோம்.

இந்த தோல்விக்காக நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. எனது வழியாக அமையவில்லை. அதில் லட்சுமண் ஒருவரே இரட்டை இலக்க ரன் எடுத்தார். நான் 4 ரன்னில் ஆட்டம் இழந்தேன். நான் இடம் பெற்ற அணியின் மோசமான பேட்டிங் நிலையாகும். இந்த தோல்வி என்னை கடுமையாக பாதித்தது. எனது அறையை மூடிவிட்டு 2 நாட்களாக உள்ளே இருந்தேன். அந்த தொடர் முழுவதும் அந்த தோல்வியின் வேதனையை உணர்ந்தேன். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.தெண்டுல்கர் 1996– 2000–ம் ஆண்டு வரை 25 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றினார். இதில் 4 டெஸ்டில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 9 டெஸ்டில் தோற்றது. 12 போட்டி ‘டிரா’ ஆனது. அவர் 200 டெஸ்டில் 15,921 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்து உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடித்த (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) சாதனை வீரர் ஆவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி