செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!… post thumbnail image
புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. மற்ற வங்கிகளில் ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு ஐந்து முறை வரை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்று இதுவரை சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி மேலும் இறுக்கியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்தில் ஐந்து முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்கமுடியும். அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 20 பிடித்தம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல், பிற வங்கி ஏ.டி.எம்.களில் மாதமொன்றுக்கு ஐந்து முறை இலவச பரிவர்த்தனை செய்து கொள்ளும் முந்தைய வசதியும் தற்போது மாதமொன்றுக்கு 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த திட்டம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.களில் இருந்து மாதத்துக்கு 5 முறை மட்டுமே இருப்பு விவரம், பணம் எடுத்தல் போன்ற சேவைகளை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். பிற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 3 முறை மட்டும் இந்த சேவைகளை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோரின் வங்கி இருப்பில் இருந்து ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.மேற்கண்ட 6 பெரு நகரங்கள் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் இருந்து இதற்கு முன்னர் உள்ள வசதிகளின்படி வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி