செய்திகள் போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!… post thumbnail image
ஐதராபாத்:-திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சிலர் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட தன்னை பிரண்ட்ஸ் – ஆக சேர்த்துக் கொள்ளுமாறு பேசி தொந்தரவு கொடுத்துள்ளனர்.

எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போன் எண், போலி பேஸ்புக் கணக்கில் தெரிவிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தார். புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார் சிவ கிருஷ்ணாவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவலை குற்றவாளி, வேலைவாய்ப்பு தொடர்பான இணையத்தள டேட்டாபேஸில் இருந்து எடுத்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவ கிருஷ்ணா, புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணை கண்டதும், அழைப்பு விடுத்து பேசியுள்ளார். எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ஆனால் பெண் பதில் அளிக்கவில்லை. பெண் பதில் எதுவும் கூறாத நிலையில் எரிச்சல் அடைந்த சிவ கிருஷ்ணா அவரது செல்போன் எண்ணை கொண்டு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை போன்றே தகவல்கள் பரிமாறிக் கொண்டுள்ளார், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி