செய்திகள்,திரையுலகம் பூஜை–கத்தி பட சி.டி.க்களை பறிமுதல் செய்த நடிகர் விஷால்!…

பூஜை–கத்தி பட சி.டி.க்களை பறிமுதல் செய்த நடிகர் விஷால்!…

பூஜை–கத்தி பட சி.டி.க்களை பறிமுதல் செய்த நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-பூஜை படத்தின் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க நடிகர் விஷால் அவ்வப்போது சி.டி.கடைகளில் சோதனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் திருப்பூரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி பூஜை பட திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தார்.

பொள்ளாச்சியிலும் அவரது சோதனை தொடர்ந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் பொள்ளாச்சி பெருமாள் வீதியில் உள்ள ஒரு சி.டி.கடைக்கு தனது உதவியாளரை அனுப்பினார். அவர் வாடிக்கையாளர் போன்று கடையில் இருந்தவரிடம் பூஜை படத்தின் சி.டி.இருக்கிறதா? என்று கேட்டார். கடைக்காரரும் இருக்கிறது என்றார். இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் அதிரடியாக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பூஜை, கத்தி படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்தார். அவருடன் நடிகர்கள் சதீஷ், வைபவ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

நடிகர் விஷால் வந்திருப்பதை அறிந்த அவரது ரசிகர்களும், பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர்.
கூட்டம் கலையாததால் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் திருட்டு சி.டி.குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சி.டி.க்களையும் கடைக்காரரையும் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி