செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுசுடன் இணைகிறார் திரிஷா!…

நடிகர் தனுசுடன் இணைகிறார் திரிஷா!…

நடிகர் தனுசுடன் இணைகிறார் திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுசுடனும் நடிப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி எடுத்து தோல்வி கண்டு வந்த திரிஷாவை, ஆடுகளம் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார் வெற்றிமாறன். ஆனால், அப்போது சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்ததால் திரிஷாவால் அவர்கள் கேட்ட தேதிக்கு கால்சீட் கொடுக்க முடியாமல் போனது.

தற்போது இறுதிச்சுற்றில் இருந்து கொண்டிருக்கும் திரிஷா. வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுசுடன் நடிப்பது உறுதியாகியிருக்கிறதாம். இந்த படத்தில் நடிக்க ஏற்கனவே கயல் ஆனந்தி உள்பட பல நடிகைகள் முயற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது த்ரிஷாவை தேடியே இந்த வாய்ப்பு சென்றிருக்கிறதாம். ஆக, திரிஷா எடுத்து வந்த பல ஆண்டு முயற்சிக்கு இப்போதுதான் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி