செய்திகள்,தொழில்நுட்பம் ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!… post thumbnail image
டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது.

இது பிரான்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தைவானில் தாயரிக்கப்பட்டது. பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’க்கள் ஜப்பான் வர்த்தக நிறுவனங்களில் சேல்ஸ்மேன் ஆக வலம் வருகிறது.
தற்போது 20 ரோபோக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1000 ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களின் செயல்பாடு விரைவில் உலகம் முழுவதும் பரவும் என நெஸ்லே கம்பெனியின் ஜப்பான் பிரிவு தலைவர் கோகோக் தகயோகா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி