நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், மேடை நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்கு யு சான்று கிடைத்தது. இதனையடுத்து படம் நவம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது ஒருவாரம் தள்ளி நவம்பர் 14ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: