‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் ரிலீஸ் மட்டுமே!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழில் வசூலை வாரிக் குவித்ததுமே, அந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர், படத்தை ரீமேக் செய்து வெளியிட்டால் நன்றாக சம்பாதித்துவிடலாம் என ஆசைப்பட்டார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. இந்தக் கதைக்கு பவன் கல்யாண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்த அவர், பவன் கல்யாணுக்கு படத்தைப் போட்டும் காட்டினார்.

படத்தைப் பார்த்த பவன் கல்யாண் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், ரீமேக் செய்து நடித்தால் தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.அதனால், வேறு வழியில்லாமல் தற்போது படத்தை ட்ப்பிங் செய்து மட்டுமே வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர். கடந்த வாரமே படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இனி இசை வெளியீட்டை நடத்தலாமா அல்லது படத்தை நேரடியாக ரிலீஸ் செய்து விடலாமா என யோசித்து வருகிறார்களாம்.

‘கத்தி’ தெலுங்கு டப்பிங்கை நவம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் இதுவரை பெரிதாக வசூலை அள்ளியதில்லை. ஆனால், இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளரான தாகூர் மது இந்த முறை விஜய்க்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: